top of page

எல்லா புகழும் அம்மாவுக்கே.




உங்களில் ஒன்றாய் நான் ஆனேன், நான் கண் திறந்த பின்


என்னுள் ஒன்றாய் நீங்கள் ஆனீர்கள், நீங்கள் கண் மறைந்த பின்

நீங்கள் மறையவில்லை, என் ஆன்மாவில் கரைந்துவிட்டீர்கள்

உங்களைத் தாயாகப் பார்த்தேன், உங்கள் மறைவிற்குப் பின் எல்லா தாயிலும் உங்களைப் பார்க்கிறேன்

என் மக்கள் சாதனை என்னுடையது என்று இருக்கும் இந்த காலத்தில்,

உங்களுடைய சாதனையை எங்களுக்கு அர்ப்பணித்தீர்கள் அம்மா!

என்னில் பாதியை எடுத்து நீங்கள் சென்றுவிட்டீர்கள்,


உங்களில் பாதியை எடுத்து இனி நான் வாழ்வேன்

எல்லா கஷ்டங்களிலும் கூட மற்றவர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப் படும் உள்ளத்தை இனி நான் எங்கே தேடுவேன்?

எந்த வேதனையிலும் முகம் சுளிக்கவில்லை நீங்கள்

நண்பர்களோ, பகைவர்களோ, அனைவருக்கும் அன்பைப் பகிர கற்றுக் கொடுத்தீர்கள்.

நீங்கள் இல்லையேல் நான் இல்லை, என் உலகம் இல்லை

அம்மா இல்லையேல், யாரும் இல்லை, எதுவும் இல்லை!

உங்களை உயிராக நினைத்து வருத்தப்பட்ட நாள் முடிந்தது

ஒரு உணர்வாக நீங்கள் என் வாழ்வில் வாழ்வீர்கள்

என் எழுத்தைத் தமிழில் வாசிக்க விரும்பினீர்கள், உங்களால் என் தமிழும் வாழ ஆரம்பித்தது

நீங்கள் வாழ்ந்த வரை என் கஷ்டத்தை நீங்கள் சுமந்தீர்கள்

நான் வாழும் வரை என் எல்லா புகழும் உங்களுக்கு சமர்ப்பணம், அம்மா!

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா

உங்கள் ஆசீர்வாதம் வேணும் எனக்கு.

**

PHOENIX GIRL


நீங்கள் என் சிரு வயதிலேயே பெண்களுக்கு மரியாதை கொடுக்கச் சொல்லிக் கொடுத்த காரணத்தால் மட்டுமே என்னால் என்னுடைய இந்த ‘Phoenix Girl’ என்ற புத்தகத்தை உருவாக்க முடிந்தது

‘Phoenix Girl’ என்ற இந்த படைப்பு என்னுடைய அர்ப்பணிப்பு அல்ல,


இது நம்முடைய படைப்பு, அம்மா, ஒரு புது உலகிற்கு!



bottom of page